Sunday, August 31, 2025

11th Tamil - Unit 1 - book back answer

 இயல் 1

I. திறன்அறிவோம் 


அ) பலவுள் தெரிக.

1. பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க.
அ) மல்லார்மே -யுகத்தின் பாடல்
ஆ) இன்குலாப் ஒவ்வொரு மொழியும்
இ) டெஃபான் மல்லார்மே - புல்லின் இதழ்கள்
ஈ) இந்திரன்- பேச்சுமொழியும் கவிதைமொழியும்
அ) அ, ஆ
ஆ) அ, ஈ
இ) ஆ, ஈ
ஈ) அ, இ
விடைகுறிப்பு: 
இ) ஆ, ஈ

2. “கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும்
காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்" அடி மோனையைத் தெரிவு செய்க.
அ) கபாடபுரங்களை - காவுகொண்ட
ஆ) காலத்தால் - கனிமங்கள்
இ) கபாடபுரங்களை - காலத்தால்
ஈ) காலத்தால் சாகாத
விடைகுறிப்பு: 
இ) கபாடபுரங்களை - காலத்தால்

3. "மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது” எனக் கூறியவர்
அ) வால்ட் விட்மன்
ஆ) எர்னஸ்ட் காசிரர்
இ) ஆற்றூர் ரவிவர்மா
ஈ) பாப்லோ நெரூடா
விடைகுறிப்பு:
இ) ஆற்றூர் ரவிவர்மா

4. “ஒரு திரவநிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்துமொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது, உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திடநிலையை அடைகிறது." இவ்வரிகள் உணர்த்தும் கருத்து.
அ) மொழி என்பது திட, திரவ நிலையில் இருக்கும்.
ஆ) பேச்சுமொழி, எழுத்துமொழியைத் திட, திரவப் பொருளாக உருவகப்படுத்தவில்லை.
இ) எழுத்துமொழியைவிடப் பேச்சுமொழி எளிமையானது.
ஈ) பேச்சுமொழியைக் காட்டிலும் எழுத்துமொழி எளிமையானது.
விடைகுறிப்பு:
இ) எழுத்துமொழியைவிடப் பேச்சுமொழி எளிமையானது.

5. மொழிமுதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க.
அ) அன்னம், கிண்ணம்
ஆ) டமாரம், இங்ஙனம்
இ) ரூபாய், இலட்சாதிபதி
ஈ) றெக்கை, அங்ஙனம்
விடைகுறிப்பு:
அ) அன்னம், கிண்ணம்

ஆ) குறு வினா


1. பேச்சுமொழி, எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?
 

விடைகுறிப்பு:

  • பேச்சுமொழியில் முகத்திலிருக்கும் வாய், உடம்பிலிருக்கும் கையைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது.
  • அதனால்தான், பேச்சுமொழி எழுத்துமொழியைக்காட்டிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்திமிக்கதாக உள்ளது.



2. என் அம்மை, ஒற்றியெடுத்த நெற்றிமண் அழகே ! வழிவழி நினதடி தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்க்கெல்லாம்
நிறைமணி தந்தவளே! இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்களை எழுதுக.

விடைகுறிப்பு:

வினையாலணையும் பெயர்கள்: தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர், தந்தவள்.


3. “நீளும் கைகளில் தோழமை தொடரும் நீளாத கைகளில் நெஞ்சம் படரும்" தொடை நயங்களை எடுத்தெழுதுக.
 

விடைகுறிப்பு:

அடிமோனை : நீளும் நீளாத

சீர்மோனை நீளாத நெஞ்சம்

அடிஎதுகை : நீளும் நீளாத

இயைபு : தொடரும் படரும்

அடிமுரண் : நீளும், நீளாத

 

4. உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன?
 

விடைகுறிப்பு:

உயிரெழுத்து - து (த் + உ) - குற்றியலுகரம்

பன்னிரண்டு டு (ட் + உ) - குற்றியலுகரம்

திருக்குறள் - ள் மெய்யீறு

நாலடியார் - ர் - மெய்யீறு


5. இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.
 

விடைகுறிப்பு:

தம் பார்வையில் இனம் மொழி ஆகியன குறித்து இரசூல் கம்சதோவ் “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம், கூடில்லாத பறவை" எனக் குறிப்பிடுகிறார்.

இ) சிறு வினா

1. சு. வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்?

 

விடைகுறிப்பு:

தன் மக்கள் நலத்தோடு வாழவேண்டுமெனத் தாய் செல்வங்களை வாரி வழங்குவாள்.

தலைமுறை தலைமுறையாய்த் தமிழ்த்தாய்தன் திருவடிகளைத் தொழுத தமிழ்ப் பற்றாளர்.

தமிழ் வயலினை அறிவால் ஆழ உழுதவர்,

பயனளிக்கும் நல்ல கருத்துகளைத் தமிழ் நிலத்தில் ஊன்றுமாறு செய்தவர்,

காலம் நேரம் கருதாது தமிழ்ப்பயிர் தழைத்தோங்க, வியர்வை சிந்த உழைத்தவர் பலராவர்.

இத்தகைய தமிழ் மக்கள் அனைவருக்கும் எண்ணற்ற மணி போன்ற இலக்கியச் செல்வங்களை ஈந்தாள்!

ஏடு தொடக்கி வைத்த தமிழன்னை, அம்மக்கள் விரலால் மண்ணில் தீட்டி எழுதக் கற்பித்ததோடு, நான்கு திசைகளையும் சுவராகக் கொண்டு எழுதவும் கற்பித்தவள்.

காலந்தோறும் வியர்வை சிந்த உழைத்துக் கலைச் செல்வங்களைப் படைக்கச் செய்தவள்.

ஆதலால், தமிழன்னையைப் பாடத்தான் வேண்டும் என, சு. வில்வரத்தினம் குறிப்பிடுகிறார்.


2. கவிதை ஒரு படைப்புச் செயல்பாடு என்பதை விளக்குக.
 

விடைகுறிப்பு:

மொழி என்பது கருத்தைப் பரிமாறிக் கொள்ள உதவும் கருவி. எனினும் அது அன்பையும், இரக்கத்தையும், ஆன்மிகத்தையும் விளக்கும்போது உணர்வுகளை வெளிப்படுத்தக் கவிதை என்னும் படைப்பாக மாறுகிறது.

உடம்பின்மேல் தோல்போல் இயங்கும் மொழி, எழுத்து மொழியாகும்போது, கவிதை உணர்வை வெளிப்படுத்துகிறது.

கவிதையில் ஒவ்வொரு சொல்லும் மற்றொன்றைவிட முக்கியமானதாகி விடும். சிலரது பேச்சு மொழியிலும் கவிதை நடனமிடும். ஆகவே, படைப்புச் செயல்பாட்டில் மொழி கவிதையாகிறது.


3. இன்குலாப், "உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்" எனக் கூறுவதன் நயத்தை விளக்குக.
 

விடைகுறிப்பு:

'உலகின் மனிதக் கடலில், நானும் ஒரு மனிதத்துளியாய் வந்து கலந்துவிட்டேன். என்னால் இந்த மக்கள் கூட்டத்திற்கு நன்மை உண்டாக வேண்டும். நான் இந்த மனிதக் கடலில் பயன்மிகு துளியாக வாழ வேண்டும் என்னும் கருத்தினை “உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்" என்னும் ஒற்றை அடியில் கவிஞர் இன்குலாப் வெளிப்படுத்துகிறார்.

நானும் என்பதில் 'உம்' விகுதியைச் சேர்த்ததனால் நான் மட்டும் தனித்து நின்று பயன்படாமல் என்னைப் போன்று உலகிற்குப் பயன்படும் மனிதர்களோடு இணைந்து மக்களாகிய கடலுக்குப் பயன்பட வேண்டும். என்றும் அவர் உணர்த்தியிருப்பது, கவிஞரின் பணிவை வெளிப்படுத்துகிறது.



4. 'என்னுயிர் தமிழ்மொழி என்பேன்' என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக.
 

விடைகுறிப்பு:

என் தாய்மொழியான தமிழ்மொழியை என் உயிர் என்பேன். இளமைப் பருவத்தில் என் நாவை அசைத்து, மழலையெனும் குழலிசையை வளர்த்த மொழி. அறிவெனும் கண்களை அகலத் திறந்து வைத்து, உலகத்தோடு ஒட்டி உறவாடச் செய்த மொழி.

மங்காத செல்வமாம் சங்க இலக்கியத்தை என் முன்னே வாரி வைத்திட்ட நன்மொழி.

கம்பனும் இளங்கோவும் தம்மிரு தோள்களில் தூக்கி வளர்த்து எனை வாழ வைத்த மொழி.

இலக்கணத் தோணியாம் தொல்காப்பியத்தில் எனை ஏற்றி இலக்கியக் கடலினில் உலவிடச் செய்த மொழி. தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தமென அருள் நூல்களால் ஆன்மிக ஒளியேற்றி வழிகாட்டச் செய்த மொழி.

உயர் தனிச் செம்மொழிக்கு உரியதெனும் பதினொரு கோட்பாட்டைத் தன்னகத்தே கொண்டிருக்கும் தன்னிகர் அற்ற தனிமொழி. இன்னும் பற்பல ஏற்றங்களைக் கொண்டிருக்கும் இன்தமிழை, என்னுயிர் என்பேன்!

  
5. மொழிமுதல், இறுதி எழுத்துகள் யாவை? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுத் தருக.
விடைகுறிப்பு:

 

மொழிமுதல் எழுத்துகள் : 22
உயிர் 12 (எ-கா):அன்னை, ஆடு, இனிமை, ஈசல், உடுக்கை, ஊசல், எறும்பு, ஏற்றம், ஐந்து, ஒன்று, ஓடம், ஔவை.

மெய் 10 (எ-கா): (க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ) எனும் பத்து வரிசைகள் கல்வி, ஙனம், சக்கரம், ஞமலி, தலை, நகம், புனல், மரம், யவனர், வில். மொழி இறுதி எழுத்துகள் 24

உயிர் 12 (எ-கா): ஈக, பலா, கிளி, தேனீ, ஏழு, பூ, எ, சே, குழந்தை, நொ, நிலவோ, வௌ. உரிஞ் - உராய்தல், பொருந் பொருந்துதல், தெவ் - பகை, சே எருது. சிவப்பு, எ - 7, வினா எழுத்து. நொ துன்பம், வருத்தம்.

குற்றியலுகரம் -1 (எ-கா): காடு. காற்று, பாம்பு, மூழ்கு, விளையாடு, எஃகு.

மெய் 11 (எ-கா): (ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்) உரிஞ், பெண், பொருந், மரம், பொன், மெய், தேர், கால், தெவ், வாழ், வாள்.

ஈ) நெடு வினா

1. நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சுமொழியையும் எழுத்து மொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க.
விடைகுறிப்பு:

 
மொழி :
        நாம் நம் எண்ணங்களைப் பிறருக்குத் தெரிவிக்க, மொழியைப் பயன்படுத்துகிறோம். மொழி இரண்டு வகைப்படும். அவை : பேச்சுமொழி, எழுத்துமொழி.


பேச்சுமொழி :
        எதிரே இருப்பவர் எத்தனை பேர் என்றாலும், பேச்சுமொழிக்கு என்று சில தகுதிகள் அமைந்து விடுகின்றன. உடம்பின் ஒரு பகுதியாக இருக்கின்ற தொண்டையிலிருந்து பேச்சு மொழியாகச் சொற்கள் எழுகின்றன. அப்போது பேச்சுமொழி திரவநிலையில் நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்து கொள்கிறது.


        எழுத்துமொழியைக் காட்டிலும் பேச்சுமொழி அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உணர்கிறேன். அத்துடன் பேச்சு மொழியில் பேச்சைக் கேட்க எதிராளி முன்னேறியிருப்பதால், அவனின் துலங்கலுக்கு ஏற்ப என் மொழி மாறுபடுகிறது. பேசுவது வாயாக இருந்தாலும், ஒட்டு மொத்த உடம்பும், உணர்வும், உள்ளமும் ஈடுபடுவதால், மிகவும் வலியதாகப் பேச்சு மொழியை உணர்கிறேன்.


எழுத்துமொழி :
        என்னதான் உணர்வு பூர்வமாக எழுதினாலும், எழுத்துமொழி உறைந்துபோன பனிக்கட்டியைப் போலத் திடநிலையை அடைகிறது. எழுத்து மொழியில் மனிதனின் கை மட்டும்தான் வேலை செய்கிறது. மொழியைக் கேட்க எதிராளி என்ற ஒருவன் கிடையாது. எனவே, எழுத்துமொழி என்பது, தனக்குத் தானே பேசிக்கொள்ளும் பேச்சுமொழி போன்றது எனலாம். எழுத்து வடிவிலான நூலைப் படிக்கையில் எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை முதலானவை அமைந்துள்ளமை நோக்கினால், படிக்கும் வேகத்தில் தடை ஏற்படும்.


நேரடிமொழி :
        பேச்சுமொழி, எழுத்துமொழி என்னும் இவ்விரண்டில் எதிராளியிடம் நேருக்கு நேராய் வெளிப்படுத்துவது பேச்சுமொழியே என்பதால், பேச்சுமொழி நேரடிமொழி எனப்படுகிறது. எனவே, பேச்சுமொழியில் பழமை தட்டாது உணர்வுகளுக்குக் குறையில்லை. எழுத்துமொழி காலத்தால் அழியாது எனினும் எப்போதும் உயிர்ப்புடனும் மாறிக்கொண்டும் இருப்பதைப் பேச்சுமொழியில் நாம் உணர்கிறோம். எனவே, பேச்சுமொழியே வலிமை வாய்ந்தது எனக் கருதுகிறேன்.

2. 'ஒவ்வொரு புல்லையும்' கவிதையில் வெளிப்படும் சமத்துவச் சிந்தனைகளைப் புலப்படுத்துக.
விடைகுறிப்பு:
        இயற்கை எண்ணற்ற உயிர்களைப் படைத்துள்ளது. படைத்த உயிர்கள் தன்னிடம் சுதந்திரமாக வாழவும் இடமளித்துள்ளது. இந்த வகையில் அனைத்தையும் இயற்கை சமமாகவே கருதுவது புலப்படுகிறது. இயற்கைதான் சமத்துவக் கொள்கையை வகுத்தளித்துள்ளது. இந்தச் சமநிலை, சமத்துவச் சிந்தனை என்பதனை இன்குலாபின் 'ஒவ்வொரு புல்லையும்' என்ற கவிதை கொண்டு நோக்குவோம்.


        சமத்துவச் சிந்தனை இருப்பதனால்தான், ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைக்க முடிகிறது. பறவைகளோடு சேர்ந்து விண்ணில் பறக்கவும் எல்லைகளைக் கடக்கவும் முடிகிறது. உலகில் பிற பொருள்களையும் தன்னைப்போல் நினைப்பவராலேயே பெயர் தெரியாதவற்றையும் 'கல்' என்றோ, 'மண்' என்றோ ஒரு பெயரை உரிமையோடு சூட்டி அழைக்க முடிகிறது. அத்துடன் சமத்துவச் சிந்தனை உள்ளத்தில் இருப்பதனால்தான் கை நீட்டவும் உள்ளத்தில் அணைத்துக் கொள்ளவும் இயலுகிறது.

        இயற்கை படைத்த பொருள்களும் உயிர்களும் கடல்போல் விரிந்துள்ளதாகக் கொண்டால், அந்தச் சிந்தனையுள்ள எவரும் அதில் ஒரு துளியாக மாறிவிட முடியும். அதனால் சமத்துவச் சிந்தனையில் தன்னை இணைத்துக் கொள்ள முடிகிறது. குயில் என்றால் கூவுவதும், காகம் என்றால் கரைவதும் இயற்கை தந்த வரம். அதை ஏற்கின்றபோது, சிந்தனை சமத்துவமாக நினைத்து அனைத்திற்கும் அடைக்கலம் தரும் எண்ணம் தோன்றிச் செயல்படத் தொடங்குகிறது.

        சமத்துவம் புனலாகப் பெருகும்போது, போதி மர நிழலும் சிலுவையும் பிறையும் அதில் ஒன்று கலந்து இயற்கையின் தன்மையைப் புலப்படுத்தும். சமத்துவச் சிந்தனை உள்ள இடத்தில்தான் விசும்பல் என்பது எந்த மூலையில் தோன்றினாலும் அனைத்துச் செவிகளிலும் எதிரொலிக்கும்; தீர்வு கிடைக்கும். கூண்டில் அடைக்கப்பட்ட பறவையின் சிறகில் இரத்தம் சிந்தும்நிலை உருவானால் அனைத்துச் சிறகுகளிலும் அதன் உணர்வு வெளிப்படும். மனிதர்களிடத்தில் இயற்கை கற்பித்த சமநிலை என்பது, சமயம் முதலிய அனைத்தையும் கடந்து விரிவடையும். சுவர் என்னும் தடை இல்லாத சமவெளியாக உருவாகச் சமத்துவம் துணை நிற்கும். அனைத்து முகங்களிலும் மகிழ்ச்சி உருவாகச் சமத்துவம் துணைபுரிகிறது. அதனால் அனைத்திற்கும் மேலாக விளங்கும் உயிரினமான மனிதம் என்பது சமத்துவச் சிந்தனை வளர்ந்த நிலையில் இசையாகப் பாடத் தொடங்குகிறது எனலாம்.


3. சிம்பொனித் தமிழரும் ஆஸ்கர் தமிழரும் இசைத்தமிழுக்கு ஆற்றிய பணிகளை நும் பாடப்பகுதி கொண்டு தொகுத்தெழுதுக.
விடைகுறிப்பு:


முன்னுரை :
        'சிம்பொனித் தமிழர்' என்று போற்றப்படுபவர் 'இசைஞானி' இளையராஜா ஆவார். 'ஆஸ்கர் தமிழர்' என்று புகழப்படுபவர் 'இசைப்புயல்' ஏ. ஆர். இரகுமான் ஆவார். இவ்விரு இசைச் சக்கரவர்த்திகள் குறித்து நாம் இக்கட்டுரையில் காண்போம்.


இசைக்கொடை:
        அன்னக்கிளி படத்தில் அறிமுகமான இளையராஜாவின் இசையோட்டம் தமிழர் வாழ்ந்த திசைகளில் எல்லாம் தென்றலாய் நுழைந்து, புதிய வாசல்களைத் திறந்தது. புதுப்புது மெட்டுகள் இளையராஜாவிடமிருந்து தமிழ்ச் சமூகத்திற்குக் கொடையாகக் கிடைத்தன. இளையராஜாவின் இசையைக் கேட்கும் ஒருவர் அடையும் அனுபவம் புதிதும் இனிமையும் ஆகும். பாடல்களின் ஒவ்வொரு சரணத்திற்கு இடையிலும் இளையராஜாவின் இசைமேதைமையை நாம் உணரலாம்.


இசைச் சங்கமம் :
        பழந்தமிழ் இசையையும் உழைக்கும் மக்களின் துள்ளல் இசையையும் மனத்தை மயக்கும் வகையில் கலந்து கொடுத்தவர் இளையராஜா. திரையிசையில், கர்நாடக இசை என்னும் பழந்தமிழிசையின் உன்னதத்தை உணர வைத்தவர். கர்நாடக இசையின் பல இராகங்களைத் திரை யிசையில் அறிமுகப்படுத்தினார். அதனால் திரைமெல்லிசை புதிய உயரங்களைத் தொட்டது.


சமானியரை ஈர்த்த இசை :
        இசை என்பது மேட்டுக்குடி மக்களின் சொத்தன்று; அஃது எளிய மக்களின் பண்பாட்டு வெளிப்பாடு என்பதை நிறுவியவர் இளையராஜா. திரைப்படப் பாடல்களிலும் பின்னணி இசையிலும் விடுபட்டுப் போயிருந்த வாய்மொழித் தன்மையையும் யதார்த்தத்தையும் கொண்டு வந்த இளையராஜாவின் இசை, சாமானியரையும் ஈர்த்தது.


பண்பாட்டு வெளிப்பாடு :
        இளையராஜா, தமிழ்ச் செய்யுளின் யாப்போசைக் கட்டமைப்புக்குள் இருக்கின்ற இசை ஒழுங்கைப் புரிந்துகொண்டு இசையமைத்தார். ஆகவே, அவர் இசையமைத்த பாடல்கள் செவிக்கு இனிய 'செவியுணர் கனி'களாயின; தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வெளிப்பாடாகவும் மாறின.


புதிய எழுச்சி :
        1992ஆம் ஆண்டில் 'ரோஜா' திரைப்படத்தின் இசையமைப்பாளராய்த் தமது பணிகளைத் தொடங்கினார் ஏ. ஆர். இரகுமான். இவரது இசை, தமிழ்த் திரைப்பட இசை உலகில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது. தமது முதல் படத்திற்கே 'தேசிய விருது' பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையையும் இரகுமான் பெற்றார். தமது துள்ளல் இசைப்பாடல்களால், புதிய இசை ஆக்கங்களால் இந்திய இளைஞர்களின் மனத்தைக் கொள்ளை கொண்டார் ஏ. ஆர். இரகுமான்.


துள்ளல் இசை நாயகன் :
        தமிழ் யாப்பிலக்கணத்தின் நால்வகைப் பாக்களில் கலிப்பாவின் ஓசை, துள்ளல் ஓசையாகும். இது கொண்டாட்ட மனநிலையின் வெளிப்பாடாக இருக்கும். இந்தத் துள்ளல் இசைச்சாயல் தமிழ் மக்களின் வாழ்வில் எங்கும் நிறைந்திருப்பது. அதனை நுட்பமாக உணர்ந்த இரகுமான், தம் இசைக்கோவையில் அதனை உயிர்ப்புடன் கொண்டு வந்தார்.


கனவை இசையாக மொழிபெயர்த்தவர் :
        உலகெங்கும் பரவிய தமிழ் இளைஞர்களைத் தம் இசையால் இணைத்தார் ஏ. ஆர். இரகுமான். பல நாடுகளைச் சேர்ந்த இசை, பண்பாட்டுக் குறியீடுகளைத் தம்முடைய இசையிலே தவழவிட்டார். இணைய வழியில் உலவும் இளைஞர்களின் கனவை இசையாக மொழிபெயர்த்தார்.


கணினி இசைமேதை :
        நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை இவற்றுடன் மேற்கத்திய உலகளாவிய இசை முறைகளையும் கலந்து, புதிய கணினித் தொழில்நுட்ப உதவியுடன் உலகத்தரத்தில் இசையமைத்தார். புதிய பாடகர்கள் பலரை அறிமுகம் செய்தார்.


முடிவுரை :
        இவ்வாறு சிம்பொனித் தமிழர் இளையராஜாவும், ஆஸ்கர் தமிழர் ஏ. ஆர். இரகுமானும் தமிழிசைக்கு வளம் சேர்த்ததோடு மட்டுமன்றி, தமிழர்களின் இசை வரலாற்றில் மாபெரும் அடையாளங்களாய் நிலைத்து நிற்கின்றனர்.

II. மொழியை ஆள்வோம்

அ) சான்றோர் சித்திரம்  

“தமிழ் இலக்கிய வரலாற்றில், கம்பருக்குப் பின்னர், ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்தபின், வாராது வந்துதிக்க புலமைக் கதிரவன்” எனத் தமிழறிஞர்கள் போற்றிய தென்மொழிப் பெரும்புலவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் ஆவார். திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள அதவத்தூர் என்னும் ஊரில் பிறந்த இவர், திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராக விளங்கினார்.

‘மீனாட்சிசுந்தரனார், தமிழறிஞர்களைத் தேடிக் கண்டு, வழிபட்டு, செவிதிறந்து கற்றார். திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், சென்னைத் தாண்டவராயர், திருத்தணிகை விசாகப் பெருமாள் ஆகியோரிடம் பூக்கள் தோறும் சென்று தேனுண்ணும் வண்டுபோல் பாடம் கற்றார்.

அவர் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்ற நூல், அவருடைய பெருமையை என்றும் உணர்த்தும். தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர். யமக அந்தாதி, திரிபந்தாதி, வெண்பா அந்தாதிகள் ஆகியவற்றை உருவாக்கிப் புகழ் பெற்றார். மாலை, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் ஆகியவற்றைப் பாடிப் பெருமை அடைந்தார். உ.வே. சாமிநாதர், தியாகராசர், குலாம்காதிறு நாவலர் போன்றோர், இவரின் மாணவர்கள். மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார் அவர்களின் புகழ், தமிழ் உள்ளவரையிலும் வாழும்.

1. தமிழிலக்கிய வரலாற்றில் புலமைக் கதிரவன் – இத்தொடரில் புலமைக் கதிரவன் என்பதற்கு இலக்கணக்குறிப்புத் தருக.
விடைகுறிப்பு:
புலமைக் கதிரவன் – உருவகம் 

2. மேற்கண்ட பத்தியில் இடம்பெற்றுள்ள உவமை, உருவகத் தொடர்களைக் கண்டறிக.
விடைகுறிப்பு:
புலமைக் கதிரவன் – உருவகத் தொடர்.
(பூக்கள்தோறும் சென்று தேனுண்ணும்) வண்டுபோல் – உவமைத்தொடர்.

3. மீனாட்சிசுந்தரனார் தலபுராணங்கள் பாடுவதில் சிறந்தவர் – விடைக்கேற்ற வினாவை அமைக்க.
விடைகுறிப்பு:
தலபுராணங்கள் பாடுவதில் சிறந்தவர் யார்?

4. பத்தியில் மொழிமுதல் எழுத்துகளைக்கொண்டு அமைந்த சொற்களுள் எவையெவை வடமொழிச் சொற்கள் எனச் சுட்டுக.
விடைகுறிப்பு:
மகாவித்துவான், தலபுராணம், தேசிகர், யமகம், அந்தாதி, கலம்பகம்.

5. விளங்கினார் – பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக.
விடைகுறிப்பு:
விளங்கினார் – விளங்கு + இன் + ஆர்
விளங்கு – பகுதி, இன் – இறந்தகால இடைநிலை, 

ஆர் – பலர்பால் விலை மாற்று விகுதி.

 

ஆ) தமிழாக்கம் தருக.

1. The Pen is mightier than the Sword
எழுதுகோலின் முனை, வாளின் முனையைவிட வலிமையானது.

2. Winners don't do different things, they do things differently.
வென்றோர், வேறுபட்ட செயல்களைச் செய்வதில்லை; அவர்கள் செயல்களை வேறுவிதமாகச் செய்வார்கள்.

3. A picture is worth a thousand words.
ஒரு படம் என்பது. ஆயிரம் வார்த்தைகளைவிட மதிப்பு உள்ளது.

4. Work while you work and play while you play.
உழைக்க வேண்டிய நேரத்தில் உழை! விளையாட வேண்டிய நேரத்தில் விளையாடு!

5. Knowledge rules the world.
அறிவே உலகை ஆளுகிறது.
 

இ) பிறமொழிச் சொற்களை தமிழாக்கம் தருக  

வாடகை - குடிக்கூலி
சம்பளம் - ஊதியம்
விசா - நுழைவு இசைவு
ராச்சியம் - மாநிலம்,நாடு
மாதம் - திங்கள்
ஞாபகம் - நினைவு
பாஸ்போர்ட் - கடவுச்சீட்டு
சரித்திரம் - வரலாறு
போலீஸ் - காவல்
வருடம் - ஆண்டு
கம்பெனி - குழுமம்
முக்கியத்துவம்  - முதன்மைத்தன்மை
நிச்சயம்  - உறுதி
தேசம் - நாடு
பத்திரிகை  - இதழ்
சொந்தம் - உறவு
உத்திரவாதம்  - பொறுப்புறுதி
வித்தியாசம் - வேறுபாடு
கோரிக்கை  - விண்ணப்பம்
சமீபம் - அண்மை
சந்தோஷம் - மகிழ்ச்சி
உற்சாகம் - மகிழ்ச்சி
யுகம் - ஊழி
தருணம் - பொழுது, வேளை

ஈ) கீழ்க்காணும் நிகழ்ச்சிநிரலினைப் படித்துக் செய்தி கட்டுரையாக மாற்றுக. அச்செய்தியை நாளிதழில் வெளியிட வேண்டி முதன்மை ஆசிரியருக்கு கடிதம் எழுதுக

padasalaiguide



அனுப்புநர் :
மாணவர் இலக்கிய மன்றத் தலைவர்
அரசு மேல்நிலைப் பள்ளி,
சென்னை – 600 001.

பெறுநர் :
முதன்மை ஆசிரியர்,
தினமணி நாளிதில்
சென்னை – 600 002.

பொருள்: திங்கள் கூடுகை செய்தி வெளியிடவேண்டி - விண்ணப்பம் - சார்பு.

   
பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 25.05.2021 திங்களன்று பிற்பகல் 2.30 மணியளவில், 'அரியன கேள் புதியன செய்' எனும் இலக்கோடு திங்கள் கூடுகை நடைபெறுகிறது. 'தமிழ்த்தாய்' வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாணவர் இலக்கியச் செல்வன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூடுகைக்குத் தலைமையாசிரியர் திரு. எழிலன், தலைமையேற்றுத் தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கவிஞர் வாணி அவர்கள், 'புலம்பெயர் தமிழரின் வாழ்க்கை' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். மாணவர் ஏஞ்சலின், நன்றியுரை கூறினார். மாலை 4.00 மணிக்கு நாட்டுப்பண்ணுடன் கூடுகை நிறைவு பெற்றது.

இதைத் தங்கள் 'தினமணி' நாளிதழில் செய்தியாக வெளியிடுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இடம் : பூலாம்பாடி,                            தங்கள் உண்மையுள்ள,
நாள்: 25.05.2022.                                      பார்த்திபன்.

உறைமேல் முகவரி
முதன்மைச் செய்தி ஆசிரியர்,
'தினமணி' நாளிதழ்,
சென்னை – 600 002.


உ) பத்தியினைப் படித்து வினாக்களுக்கு விடையளி   

‘தமிழ்’ என்ற சொல் தமிழர்க்கு இனிமையானது. இனிமையும் நீர்மையும் தமிழெனல்’ ஆகும் என்று, பிங்கல நிகண்டு குறிப்பிடுகிறது. ‘தமிழ்’ என்ற சொல்லை இனிமை, பண்பாடு, அகப்பொருள் என்னும் பொருள்களிலும் வழங்கியுள்ளனர்.

“அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்” என்ற புறநானூற்றுப் பாடலடியில், ‘தமிழ்’ எனும் சொல், மொழி, கவிதை என்பவற்றைத் தாண்டிப் “பல்கலைப் புலமை” என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. “தமிழ்கெழு கூடல்” என்றவிடத்திலும், “கலைப்புலமை ” என்ற பொருளிலே ஆளப்பட்டுள்ளது. கம்பன், “தமிழ் தழீஇய சாயலவர்” என்னும் இடத்து, ‘தமிழ்’ என்பதற்கு அழகும் மென்மையும் பொருளாகின்றன.

தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில், ‘தமிழ்’, பாட்டு என்னும் பொருளில் ஆளப்படுகிறது. ஞானசம்பந்தன் சொன்ன ‘தமிழ் இவை பத்துமே’, ‘மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்’ என்பன எடுத்துக்காட்டுகளாகும். முப்பது பாட்டுகளாலான திருப்பாவையை ஆண்டாள், ‘தமிழ்மாலை’ என்றே குறிப்பது இங்கு எண்ணத்தகும். (‘பண்பாட்டு அசைவுகள்’ – தொ. பரமசிவன்)

1. தமிழ் என்னும் சொல்லுக்குரிய பல்வேறு பொருள்கள் யாவை?
விடைகுறிப்பு: 
இனிமை, பண்பாடு, அகப்பொருள் அழகு, மென்மை, பாட்டு என்பன, தமிழ் என்னும் சொல்லுக்குரிய பல்வேறு பொருள்கள்.

2. பத்தியில் உள்ள அளபெடைகளைக் கண்டறிக.
விடைகுறிப்பு: 
அதூஉம் – இசைநிறையளபெடை, 

தழீஇய – சொல்லிசையளபெடை.

3. தமிழ் என்றவுடன் உங்கள் மனத்தில் தோன்றுவதை ஒரு வரியில் குறிப்பிடுக.
விடைகுறிப்பு: 
“எம்மொழி உயர்தனிச் செம்மொழி”

4. திருப்பாவைக்கு ஆண்டாள் குறிப்பிடும் பெயர் யாது?
விடைகுறிப்பு: 
தமிழ்மாலை.

5. பத்தியின் மையக்கருத்திற்கேற்ப ஒரு தலைப்பிடுக.
விடைகுறிப்பு: 
சொல்லில் இனியது தமிழ் சொல்லே.   

ஊ) பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக

அ) காலங்காத்தால எந்திரிச்சு படிச்சா ஒரு தெளிவு கெடைக்கும்.
விடைகுறிப்பு: 

அதிகாலையில் எழுந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்.

ஆ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பயன் வராமப் போவாது.
விடைகுறிப்பு: 

முயற்சி செய்தால் அதற்கேற்ற பயன் வராமல் போகாது.

இ) காலத்துக்கேத்த மாரிப் புதுசுபுதுசா மொழி வடிவத்த மாத்தனும்.
விடைகுறிப்பு: 

காலத்துக்கு ஏற்ற மாதிரி புதிது புதியதாய் மொழிவடிவத்தை மாற்ற வேண்டும்.

ஈ) ஒவ்வொருத்தரும் பேசிக்கிட்டிருக்கும்போது எல்லாத்தையும் கவனமாப் பதிய வைக்கனும்.
விடைகுறிப்பு: 

ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, எல்லாவற்றையும் கவனமாய்ப் பதிய வைக்க வேண்டும்.

உ) தேர்வெழுத வேகமாப் போங்க, நேரங்கழிச்சி போனாப் பதட்டமாயிரும்.
விடைகுறிப்பு: 

தேர்வெழுத வேகமாகப் போங்கள்; நேரம் கழித்துப் போனால் பதற்றமாகிவிடும்.  


III. மொழியோடு விளையாடு

அ) எண்ணங்களை எழுத்தாக்குக.




தாகம்

கங்கை என்றும் வற்றுவதில்லை! 
பறவையின் தாகம் தீர்க்கிறது 
தெருக் குழாயின் சொட்டு நீர்! 
எல்லாருக்கும் நீர் உண்டு 
தேவையான அளவு மட்டும்! 
வாரி இறைக்க வசதியில்லை 
வாரிச் செல்லவும் நீரில்லை!

ஆ) தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குப்படுத்தி இரண்டு சொற்றொடர்களாக்குக

எ - கா : ஓர் பயிர் பறவை வளர வேண்டும் அழகான தண்ணீர் மயில்
அ) மயில் ஓர் அழகான பறவை,
ஆ) பயிர் வளரத் தண்ணீர் வேண்டும்.

i) பள்ளிக்கூடம் எல்லாம் தருபவை ஒவ்வொரு கலைகள் குழந்தையும் போக வேண்டும் மகிழ்ச்சி
அ) ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடம் போகவேண்டும்.
ஆ) கலைகள் எல்லாம் மகிழ்ச்சி தருபவை.

ii) நிலவு வீசுவதால் தெற்கிலிருந்து மாலை தென்றல் மகிழ்விக்கும் எனப்படுகிறது மனத்தை.
அ) தெற்கிலிருந்து வீசுவதால் தென்றல் எனப்படுகிறது.
ஆ) மாலை நிலவு மனத்தை மகிழ்விக்கும்.

iii) பிறர் செய்யாவிட்டாலும் செய்த தீமை மறக்கக்கூடாது நன்மை செய்யக்கூடாது உதவியை.
அ) பிறர் செய்த உதவியை மறக்கக்கூடாது.
ஆ) நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யக்கூடாது.

iv) நேற்று ஏன் வந்த பையன் பக்கத்தில் யார் இருக்கவில்லை தெரியுமா?
அ) நேற்று வந்த பையன் யார் தெரியுமா?
ஆ) ஏன் பக்கத்தில் இருக்கவில்லை?

v) கோசல மக்கள் நாடு ஒரு மகிழ்ச்சியாக சிறந்த வாழ்ந்து நாடு வந்தனர்.
அ) கோசல நாடு ஒரு சிறந்த நாடு.
ஆ) மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

இ) குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கண்டுபிடிப்போம்..




அ) சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த முதல்வர் (3)
விடைகுறிப்பு: 
அறிஞர் அண்ணா


ஆ) தொழிலாளர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் (10)
விடைகுறிப்பு: 
திரு. வி. கலியாணசுந்தரனார்

இ) “உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே” என்று பாடியவா (6)
விடைகுறிப்பு: 
பாரதிதாசன்

ஈ) பொதுவுடைமைக் கொள்கையின் முன்னோடிகளில் ஒருவர் (6)
விடைகுறிப்பு: 
ஜீவானந்தம்

 

ஈ) வேர்ச்சொற்களை எடுத்துக்காட்டில் உள்ளவாறு தொடர்களாக மாற்றுக

அ) வா.

அருணா, வீட்டுக்கு வந்தாள். (வினைமுற்று)
அங்கு வந்த பேருந்தில், அனைவரும் ஏறினர். (பெயரெச்சம்)
கருணாகரன், மேடையில் வந்து நின்றார். (வினையெச்சம்)
என்னைப் பார்க்க வந்தவர், என் தந்தையின் நண்பர். (வினையாலணையும் பெயர்)

ஆ) பேசு

பூங்கொடி என்னுடன் பேசுவாள். (வினைமுற்று)
நடராசன் மேடையேறிப் பேசச் சொன்னார். (பெயரெச்சம்)
அவர் என்னுடன் பேசி முடித்துவிட்டார். (வினையெச்சம்)
மேடையில் பேசியவர் மாவட்ட ஆட்சியர். (வினையாலணையும் பெயர்)

இ) தா
 

கயல்விழி எனக்குப் புத்தகம் தந்தாள். (வினைமுற்று)
அவள் தந்த முகவரி சரியானது. (பெயரெச்சம்)
மருத்துவமனையில் ஓர் உடையைத் தந்து, என்னை அணியச் சொன்னார்கள். (வினையெச்சம்)
பரிசு தந்தவர் கல்வித்துறை அமைச்சர். (வினையாலணையும் பெயர்)

ஈ) ஓடு
 

பேருந்தைப் பிடிக்க, அருணன் ஓடினான். (வினைமுற்று)
திருடன் ஓடக் காவலர் பின்தொடர்ந்தார். (பெயரெச்சம்)
ஓடி உழைத்தவர் பணக்காரர் ஆனார். (வினையெச்சம்)
ஒட்டப்பந்தயத்தில் ஓடியவர், பரிசு பெற்றார். (வினையாலணையும் பெயர்)

உ) பாடு

இரத்தினவேல் மென்மையாகப் பாடினார். (வினைமுற்று)
பிரேமா, பாட்டுப் பாட வந்தாள். (பெயரெச்சம்)
பாகவதர், பாடி முடித்தார். (வினையெச்சம்)
நேற்றுப் பாடியவர், இன்று சென்னை செல்கிறார். (வினையாலணையும் பெயர்)

 

IV. நிற்க அதற்குத் தக.

அ) படிப்போம்; பயன்படுத்துவோம்!   

அழகியல் – Aesthetics
புத்தக மதிப்புரை –  Book Review
இதழாளர் – Journalist
புலம் பெயர்தல் – Migration
கலை விமர்சகர் – Art Critic
மெய்யியலாளர் – Philosopher

Buy bestselling books online

 

V இலக்கணத் தேர்ச்சி கொள்

1. தவறான இணையைத் தேர்வு செய்க.
அ) மொழி + ஆளுமை - உயிர் + உயிர்
ஆ) தமிழ் + உணர்வு - மெய் + உயிர்
இ) கடல் + அலை உயிர் + மெய்
ஈ) மண் + வளம் மெய் + மெய்
விடைகுறிப்பு: 
இ) கடல் + அலை - உயிர் + மெய்

2. மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?
விடைகுறிப்பு: 

 
மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் இருபத்திரண்டு.அவை : 

உயிரெழுத்துகள் பன்னிரண்டும் மெய்யெழுத்துகளில் க், ச், த், ப், ங், ஞ், ந், ம், ய், வ் ஆகிய பத்து உயிர்மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும். 

 

3. மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் எத்தனை? எடுத்துக்காட்டுத் தருக.
விடைகுறிப்பு: 

மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் இருபத்து நான்கு.

அவையாவன : உயிரெழுத்துகள் பன்னிரண்டும், மெய்யெழுத்துகளுள் (ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்) ஆகிய மெய்கள் பதினொன்றும், குற்றியலுகரம் ஒன்றும் ஆகும்.

உயிர் தனித்தும் மெய்யோடு சேர்ந்தும் மொழிக்கு ஈற்றில் வரும்.

எ.கா : ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள; அ, இ, உ, எ, ஒ உயிர் தனித்து ஈறாயின.

பலா, கரி, தீ, நடு, பூ, சோ, தே, தை, நொ, போ, வௌ, விள உயிர்மெய்யோடு சேர்ந்து ஈறாயின.

உறிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், தமிழ், வாள் - மெய் ஈறாயின.

எஃகு - குற்றியலுகரம் ஈறாயிற்று.


4. உயிரீறு, மெய்யீறு விளக்குக.
விடைகுறிப்பு: 
எ.கா: மணி + அடி
        இதில் நிலைமொழி மணி (ண் + இ) ; ஈற்றெழுத்து 'இ’. இது உயிர் எழுத்து என்பதால், இதை உயிரீறு என்பர்.
எ.கா: அவன் + அழகன்
        இதில் நிலைமொழி அவன். அச்சொல்லில் ஈற்றில் அமைந்துள்ள எழுத்து 'ன்' என்னும் மெய்யாகும். எனவே, இதை மெய்யீறு என்பர்.


5. உயிர்முதல், மெய்ம்முதல் எடுத்துக்காட்டுடன் விளக்குக. 

விடைகுறிப்பு: 

எ - கா: மணி + அடி
        இதில் வருமொழி 'அடி'. அதில் முதலெழுத்து 'அ'. ஆதலால், அஃது (அ) உயிர்முதல் ஆகும்.
எ.கா: மழை + துளி
        இதில் வருமொழி 'துளி'. இதில் முதலெழுத்து 'து' (த் + உ) மெய்யெழுத்து. எனவே, இது மெய்ம்முதல் ஆகும். 









Share:

0 comments:

Post a Comment